Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..........

அன்பான  சகோதர சகோதரிகளே!

ஏர்வாடி -முஸ்லிம் ஜமாஅத்-தின்சார்பாக தாங்களுடன் ஒரு சில விஷயங்கள் ஹிஜ்ரி 1433 ரமளான் மாதத்தினுடையஇப்பதிவின் மூலம் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகின்றோம் அல்ஹம்துலில்லாஹ்.

நாம் ஏர்வாடியில் இணைவைப்பில்லாத தூய இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தபல்லாண்டுகாலாக உழைத்ததின் விளைவாக இன்று எண்ணிலடங்கா மக்களைஇணைவைப்பிலிருந்து அல்லாஹ் அவனுடைய அருளால் காப்பாற்றியுள்ளான். அதற்கானநற்கூலியை நாம் இம்மையிலும், மறுமையில் பெற்று நிம்மதியான சுவனவாழ்வை அடையமுயற்சிப்போம்.   அல்லாஹ்விற்கு மட்டுமே பயந்தவர்களாக வாழ்ந்து, அவனுக்காகமட்டுமே வணக்க வழிபாடுகளை அமைத்து நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழியில்என்றென்றும் செயல்பட்டுக்கொண்டிருப்போம்.  அல்லாஹ் அதற்காக நமக்கு அருள்செய்ய பிரார்த்திப்போம்.

ஏர்வாடி மக்களும், ஏர்வாடியில் உள்ள முஹல்லா மஸ்ஜிதுகளின் நிர்வாகிகளும் அல்லாஹ்விற்குஇணைவைத்துவணங்கி கொண்டிருந்த  நிலையில்,அல்லாஹ்வின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி, அவனுக்கு இணைவைக்காமல் அவனை தூய்மையாக வணங்குவதற்காக நமதூர் ஏர்வாடியில்வடக்கு மெயின் ரோட்டில் மையப்பகுதியில் ஒரு இடத்தைஅல்லாஹ் நமக்குஏற்படுத்தித் தந்தான்.  அல்ஹம்துலில்லாஹ்.

அல்லாஹ்ஏற்படுத்திதந்த இடத்தில் அல்லாஹ்விற்காக அவனுடைய அருளை கொண்டு, மஸ்ஜித்ஏற்படுத்தப்பட்டு, ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத் என பெயரிடப்பட்டுபல வருடங்களாக செயல்பட்டுவருகின்றது.  அதில் அல்லாஹ் கூறியுள்ளபடி தொழுகையையும் முறையாககடைபிடிக்கப்பட்டுஸகாத்தையும் முறையாக பெற்று, பைத்துல் மால் மூலம்நிர்வாகம்செய்யப்பட்டு வருகின்றது.  அல்லாஹ்விற்குவணக்கங்களை நிறைவேற்றும்போது யாருக்கும் அஞ்சாமல் மன நிம்மதியுடன் அவனுக்குசெய்யவேண்டிய கடமைகளை தற்போது நாம் நிறைவேற்றி வருவதே அவன் நமக்கென்று ஒருஇடம் ஏற்படுத்தி தந்ததால் தான்.  எனவே நாம் இணைவைப்பில்லாமல்மனநிம்மதியுடன் அவனை வணங்கி ஏர்வாடியில் வாழ்ந்து வர  அல்லாஹ் நமக்கு அருள்செய்துள்ளதை நாம் என்றுமே மறக்க முடியாத அருட்கொடையாகும். 

முன்னோர்களையும், தங்கள் தலைவர்களையும், தங்கள் இமாம்களையும் கண்மூடி பின்பற்றி வாழ்ந்துகொண்டிருக்கின்ற சமுதாயத்திற்கு மத்தியில்,குர்ஆனின்வசனங்களை படித்து அதனடிப்படையில் சிந்தித்து நம் அனைவரையும் வாழ வழிவகை செய்து தந்தஅல்லாஹ்விற்குஅதிகமதிகம் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.

மேலும், அல்லாஹ் பூமியில் நமக்கென்று இடம் ஏற்படுத்திக் கொடுத்தால், நாம்என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதை கீழ்கண்ட வசனத்தை சிந்திப்பதின் மூலம்புரிந்து கொள்ளலாம்.

الَّذِينَ إِنْ مَكَّنَّاهُمْ فِي الْأَرْضِ أَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنْكَرِ وَلِلَّهِ عَاقِبَةُ الْأُمُورِ

அன்றியும்இவர்களுக்கு நாம் பூமியில் இடம் ஏற்படுத்திக்கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள்; ஜகாத்தும்கொடுப்பார்கள்; நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள்; தீமையைவிட்டும் விலக்குவார்கள் மேலும், காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமேஇருக்கிறது.22:41
மேலும், தொழுகையையும்ஸகாத்தையும் நிலைநாட்டினால் மற்றஅனைத்து இஸ்லாமிய பணிகளையும் செய்ய எந்த இடைஞ்சலும் ஏற்படாதுஎன்பதை கீழ்கண்ட வசனத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.  எனவே தான் நேரானமார்க்கம்என்பதே தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தை வழங்குவதுதான் என இந்த இடத்தில்  அல்லாஹ்குறிப்பிடுகின்றான்.

وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ

அல்லாஹ்வுக்குவணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக  பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும், மேலும்தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும், மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்கவேண்டும் என்பதைத் தவிர அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை.இதுதான் நேரான மார்க்கமாகும். 98:5

எனவே அல்லாஹ் நேரான மார்க்கம் என்று கூறியுள்ள அடிப்படையில் ஒரு முஸ்லிம் ஜமாஅத் எம்முறையில்செயல்படவேண்டும் என்பதற்கு ஒரு முன்மாதிரியாக ஏர்வாடி -முஸ்லி்ம் ஜமாஅத் ஆரம்பித்த நாளில் இருந்தே இயன்றவரை இன்றும் செயல்பட்டுவருகின்றது, இன்ஷாஅல்லாஹ் இனியும் செயல்படும்.  அல்ஹம்துலில்லாஹ்.

யாரை ஜமாஅத்தில் இணைத்து கொள்ள வேண்டும் என்பதையும் அல்லாஹ் கீழ்காணும் வசனம் மூலம் தெளிவாக்குகின்றான்.

إِنَّمَا وَلِيُّكُمُ اللَّهُ وَرَسُولُهُ وَالَّذِينَ آمَنُوا الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ رَاكِعُونَ

நிச்சயமாகஉங்களை நிர்வகிக்கும் பொறுப்புதாரிகள் (யாரென்றால்) அல்லாஹ்வும், அவனுடைய தூதரும், (இன்னும்) எவர் ஈமான்கொண்டு, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, தலைசாய்த்தும் வருகிறார்களோ அவர்களும்.5:55

وَمَن يَتَوَلَّ اللَّـهَ وَرَ‌سُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّـهِ هُمُ الْغَالِبُونَ

அல்லஹ்வையும் அவனது தூதரையும் முஃமின்களையும் யார்(தங்களுடைய)நிர்வாக பொறுப்பாளர்களாகஆக்குகிறார்களோ, அவர்கள்தாம் ஹிஸ்புல்லாஹ் (அல்லாஹ்வின் கூட்டத்தினர்)ஆவார்கள்; நிச்சயமாக இவர்களே மிகைத்து வெற்றியுடையோராவார்கள்.5:56

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا الَّذِينَ اتَّخَذُوا دِينَكُمْ هُزُوًا وَلَعِبًا مِّنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِن قَبْلِكُمْ وَالْكُفَّارَ‌ أَوْلِيَاءَ ۚ وَاتَّقُوا اللَّـهَ إِن كُنتُم مُّؤْمِنِينَ

முஃமின்களே! உங்களுக்குமுன் வேதம் வழங்கப்பட்டவர்களிலிருந்தும், மறுப்பவர்களிலிருந்தும், யார் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களை நீங்கள்(உங்களின்) நிர்வாக பொறுப்பாளர்களாகஆக்கிக் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கேஅஞ்சி நடந்து கொள்ளுங்கள். 5:57

அல்லாஹ்வும்அவனுடைய தூதரும், மற்றும் ஈமான் கொண்டு தொழுகையை கடைபிடித்து ஸகாத்தையும்கொடுத்து அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு தலைசாய்த்து வருபவர்களையே நாம் நம்மை நிர்வகிக்கும் பொறுப்புதாரிகளாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதை மிகத்தெளிவாக அல்லாஹ் மேற்கண்ட 5:55 வசனத்தில் கூறுகின்றான்.

எனவே யாரெல்லாம் அல்லாஹ்வின் பொருத்தத்தை மட்டும் நாடி, இணைவைப்பைஆதரிக்காமல் நமது ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத்தில்  தொழுகையை நிறைவேற்றிஸகாத்தையும் செலுத்தி ஜமாஅத்தின் மூலமாக நடைபெறும் இறைபணிகளில் தங்களையும்இணைத்து கொள்கின்றார்களோ அவர்களே ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத்தைநிர்வகிக்கவும், அங்கம் வகிக்கவும் தகுதியானவர்கள். 

எனவே  நமது ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத்தில் தொழுகையை மட்டும் நிறைவேற்றி ஸகாத்தைநமது ஜமாஅத்திற்கு கொடுக்காமல் இருப்பவர்கள் நமது ஜமாஅத்தில்நிர்வாகிகளாகவோ, அங்கத்தினர்களாகவோ இடம் பெற முடியாது என்பதைஇத்தருணத்தில் தாங்களுக்குதெரிவித்துக்கொள்கின்றோம்.
அதே போல் ஒருவர் ஸகாத்தை தந்துவிட்டு தன்னுடைய தொழுகைகளை,  பித்அத்களையும் இணைவைப்புகளையும் ஆதரிக்கும் மஸ்ஜிதுகளில் நிறைவேற்றினாலும்நம்மை நிர்வகிக்கும் பொறுப்புதாரிகளாகவும், அங்கத்தினர்களாகவும் இருக்க முடியாது என்பதையும் நாம்மேற்கண்ட வசனத்தின் மூலம் விளங்க முடிகின்றது.  இதையே அல்லாஹ்கீழ்கண்டவாறு விளக்குகின்றான்.

مَا كَانَ لِلْمُشْرِكِينَ أَنْ يَعْمُرُوا مَسَاجِدَ اللَّهِ شَاهِدِينَ عَلَى أَنْفُسِهِمْ بِالْكُفْرِ أُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ وَفِي النَّارِ هُمْ خَالِدُونَ

´நிராகரிப்பின்´ மீது தாங்களே சாட்சி சொல்லிக் கொண்டிருக்கும், இந்த இணைவைப்பாளர்கள்அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்ய உரிமையில்லை அவர்களுடைய நன்மைகள் அழிந்துவிட்டன - அவர்கள் என்றென்றும்நரகத்தில் தங்கிவிடுவார்கள்.9:17


لَّا يَتَّخِذِ الْمُؤْمِنُونَ الْكَافِرِ‌ينَ أَوْلِيَاءَ مِن دُونِ الْمُؤْمِنِينَ ۖ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ فَلَيْسَ مِنَ اللَّـهِ فِي شَيْءٍ إِلَّا أَن تَتَّقُوا مِنْهُمْ تُقَاةً ۗ وَيُحَذِّرُ‌كُمُ اللَّـهُ نَفْسَهُ ۗ وَإِلَى اللَّـهِ الْمَصِيرُ‌

முஃமின்கள் முஃமின்களையன்றி நிராகரிப்பாளர்களை (தங்களின்) நிர்வாக பொறுப்பாளர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; யார்எதேனும் ஒரு விவகாரத்தில்அவ்வாறு செய்கின்றாறோ(அதில்)அல்லாஹ்விடமிருந்து எதுவுமில்லை.  (காஃபிர்கள்) அவர்களிடமிருந்து தங்களைப்பாதுகாத்துக் கொள்வதற்காகவே தவிர.   இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும், அல்லாஹ்விடமே மீள வேண்டியதிருக்கிறது.(3:28)

الَّذِينَ يَتَّخِذُونَ الْكَافِرِ‌ينَ أَوْلِيَاءَ مِن دُونِ الْمُؤْمِنِينَ ۚ أَيَبْتَغُونَ عِندَهُمُ الْعِزَّةَ فَإِنَّ الْعِزَّةَ لِلَّـهِ جَمِيعًا

இவர்கள்முஃமின்களை விட்டும் நிராகரிப்பாளர்களை (தங்களின்) நிர்வாக பொறுப்பாளர்களாகஎடுத்துக்கொள்கிறார்கள். என்ன! அவர்களிடையே இவர்கள் கண்ணியத்தைநாடுகிறார்களா? நிச்சயமாக அனைத்து கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியது.4:139

அல்லாஹ்வின்மஸ்ஜிதுகளை இணைவைப்பாளர்கள் பரிபாலனம் செய்ய உரிமையில்லை என்பதோடுஅவர்களுடைய செய்த நன்மைகள் அழிந்து விட்டதோடு அவர்கள் என்றென்றும்நரகத்தில் தங்கிவிடுவார்கள் என அல்லாஹ் கூறுகின்றான்.  அப்படிபட்டமஸ்ஜிதுகளில் தொழுகையை ஆக்கிகொண்டுஸகாத்தை மட்டும் நமது ஜமாஅத்தில் அவர்கள் தருவதால் எந்த பிரயோஜனமும் மறுமையில் அவர்களுக்கு கிடைக்கப்போவதில்லை. 

முஃமின்களுக்குஇணைவைப்பாளர்களும், நிராகரிப்பாளர்களும்  நிர்வாக பொறுப்பாளர்களாக இருக்கமுடியாது என்பதையும் மேலே கூறப்பட்ட வசனங்கள் கூறுகின்றது.

நமது ஏர்வாடி - முஸ்லிம் ஜமாஅத்தில் இணைந்து செயல்பட விருப்பம்உள்ளவர்கள் நமது ஜமாஅத்தில் தங்களுடைய தொழுகையையும், ஸகாத்தையும்  முறைப்படி நிறைவேற்றி இணைந்து கொள்ளலாம்.

அல்லாஹ்வைத்தவிர உலகின் வேறெதற்கும் அஞ்சாமல், தொழுகையையும்ஸகாத்தையும் ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத்தில் மட்டும்நிலைநாட்டும் காலமெல்லாம் நீங்கள் ஏர்வாடி - முஸ்லிம் ஜமாஅத் மஸ்ஜிதைபரிபாலனம் செய்து நிர்வகிக்கும் தகுதியை பெறுவீர்கள்.  அல்லாஹ் தன்னுடையமஸ்ஜிதுகளைபரிபாலனம் செய்பவர்களின் தகுதியை கூறும் போது கீழ்கண்ட வாறு கூறுகின்றான்.

إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ فَعَسَى أُولَئِكَ أَنْ يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ

அல்லாஹ்வின்மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள்மீதும் ஈமான் கொண்டுதொழுகையைக் கடைப்பிடித்து ஜக்காத்தை (முறையாகக்)கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம்- இத்தகையவர்கள்தாம்நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள்.9:18

எனவேஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத்துடைய மஸ்ஜிதை பரிபாலனம் செய்யும், அங்கம் வகிக்கும் தகுதியை பெறமேற்கண்ட வசனத்தை ஆதாரமாக கொண்டு செயல்படவும் என ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத்நிர்வாகம்  கேட்டுக்கொள்கின்றது. 

மஸ்ஜிதை பரிபாலனம் செய்வது என்பதில் பைத்துல் மாலும் அடங்கும்என்பதையும் நாம் மேற்கண்ட வசனத்தின் மூலம் அறியலாம்.  எனவே மஸ்ஜிதைஏற்படுத்தி தொழுகையையும், தொழுபவர்களிடம்  ஸகாத்தையும் பெற்றே இஸ்லாம்கூறும் முஸ்லிம் ஜமாஅத்துகள் அமைய வேண்டும் என்பதையும் இதன் மூலம் நாம் அறியலாம்.

இஸ்லாமிய அடிப்படையில் தொழுகைக்குரியமஸ்ஜிதுளை ஏற்படுத்தி அதில் பைத்துல்மாலையும் நிறுவி தொழுகையையும்ஸகாத்தையும் நடைமுறைப்படுத்தினால் தான் அது ஒரு ஜமாஅத் என்று கூற முடியும்.
எனவே மஸ்ஜிதுகளை ஏற்படுத்தாமல்  மக்களிடம் சென்று ஸகாத் பொருட்களை மட்டும் திரட்டி இயக்கங்கள், அமைப்புகள்நடத்துவது இஸ்லாம் காட்டித்தராத நூதன வழியாகும்.  நூதனங்கள் அனைத்தும்வழிகேடாகும் ஆகும். வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு இட்டுச்செல்லும்.

எனவே இஸ்லாம்கூறும் மேற்கண்ட அடிப்படைகளில்  ஜமாஅத்தில் இணைந்து செயல்படவிரும்புபவர்களை ஏர்வாடி - முஸ்லிம் ஜமாஅத் என்றென்றும்  வரவேற்க தயாராகஉள்ளது.

மேலும் நமது முஸ்ஸிம் ஜமாஅத் ஆற்றிவரும் தஃவா பணிகள்.

அல்லாஹ்வை இணைவைப்பில்லாமல் கலப்பற்று வணங்கினால் தான் சொர்க்கம்செல்லமுடியும் என்பதை எப்படி நாம் குர்ஆனிலிருந்து அறிந்து கொண்டு அதன்படிநடந்து வாழந்து வருகின்றோமோ, அதுபோல் இறைமறை கூறும்  நாட்காட்டியைதவிர்த்து மற்ற அனைத்து நாட்காட்காட்டிகளையும் ஒழித்து காட்ட, இறைவன்நமக்கருளிய சந்திர நாட்காட்டியை உலகில் மேலோங்க செய்து அதை உலக மக்கள்அனைவரும் நடைமுறைப்படுத்த அனைத்து வகைகளிலும் நமது ஜமாஅத்  பாடுபட்டுவருகின்றது.  

மேலும் அல்லாஹ் தன்னுடைய நாட்காட்டியைப்பற்றி கூறும் போது, கீழ்கண்டவாறு கூறுகின்றான்.

إِنَّ عِدَّةَ الشُّهُورِ‌ عِندَ اللَّـهِ اثْنَا عَشَرَ‌ شَهْرً‌ا فِي كِتَابِ اللَّـهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْ‌ضَ مِنْهَا أَرْ‌بَعَةٌ حُرُ‌مٌ ۚ ذَٰلِكَ الدِّينُ الْقَيِّمُ ۚ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنفُسَكُمْ ۚ وَقَاتِلُوا الْمُشْرِ‌كِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً ۚ وَاعْلَمُوا أَنَّ اللَّـهَ مَعَ الْمُتَّقِي

வானங்களையும், பூமியையும் படைத்த நாளிலிருந்தே அல்லாஹ்விடம் அவனுடையபதிவேட்டில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். அவற்றில் நான்குதடுக்கப்பட்டவை.அதுவே நிலையான மார்க்கம். எனவே, அந்த மாதங்களில் உங்களுக்கு நீங்களே அநீதி இழைத்துக்கொள்ளாதீர்கள். இணைவைப்போர் உங்களுடன் எல்லா முறைகளிலும் போரிடுவதுபோல்நீங்களும் அவர்களுடன் எல்லா முறைகளிலும் போரிடுங்கள்.பயபக்தியுடையோருடன் நிச்சயமாக அல்லாஹ் இருக்கிறான் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.9:36

إِنَّمَا النَّسِيءُ زِيَادَةٌ فِي الْكُفْرِ‌ ۖ يُضَلُّ بِهِ الَّذِينَ كَفَرُ‌وا يُحِلُّونَهُ عَامًا وَيُحَرِّ‌مُونَهُ عَامًا لِّيُوَاطِئُوا عِدَّةَ مَا حَرَّ‌مَ اللَّـهُ فَيُحِلُّوا مَا حَرَّ‌مَ اللَّـهُ ۚ زُيِّنَ لَهُمْ سُوءُ أَعْمَالِهِمْ ۗ وَاللَّـهُ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِ‌ينَ

அந்நஸீவு - மாற்றுதல் - நிராகரிப்பையே அதிகப்படுததுகிறது. இதன் மூலம்இறைமறுப்பாளர்களே வழி கெடுக்கப்படுகின்றனர். ஏனெனில், அல்லாஹ் தடுத்ததின்எண்ணிக்கையைப் பூர்த்தியாககுவதற்காகவும், அல்லாஹ் தடுத்ததைவிடடுவிடுவதற்காகவும் ஒர் ஆண்டில் அதை ஆகுமாக்கிக் கொள்கின்றர். மற்றோர்ஆண்டில் அதை தடுத்துக்கொள்கின்றனர். இன்னும் இறைமறுப்பாளர்கள் கூட்டத்தைஅல்லாஹ் நேர்வழி நடத்தமாட்டான். 9:37

அல்லாஹ் தன்னுடைய நாட்காட்டியை பின்பற்றுவதையும் நேரான மார்க்கம் எனகூறுவதால், கடந்த பல ஆண்டுகாலமாக இஸ்லாம் கூறும் நாட்காட்டி முறையை ஆய்வுசெய்து அதை பின்பற்றி, அதைசெயல்முறைப்படுத்தியும் நடைமுறைப்படுத்தியும் வருகின்றது ஏர்வாடி -முஸ்லிம் ஜமாஅத்
எனவே நாம் அனைவரும்அதிகமதிகம் இஸ்லாம் கூறும் சந்திர நாட்காட்டி சம்மந்தப்பட்ட பிரச்சாரத்தில்ஈடுபட்டு கிறிஸ்துவ, யூத காலண்டரை ஒழித்து, இஸ்லாமிய காலண்டரை உலகம் பின்பற்ற முழு முயற்சி செய்வோம். இன்ஷாஅல்லாஹ்.
மேலும் அல்லாஹ்வின்மார்க்கத்தை இவ்வுலகில் மேலோங்க  செய்ய எண்ணிலடங்கா பிரச்சார பணிகளை எந்த விளம்பரநோக்கமும், வருவாய் நோக்கங்களும் இல்லாமல் இறை திருப்தியை நாடி  மட்டும் செய்து வருகின்றது என்பதை  நீங்கள் அனைவரும் அறிந்தே வைத்திருப்பீர்கள்.
இஸ்லாம்நம்மிடம் ஒழிக்க சொன்ன வட்டியை முழுமையாக ஒழிப்பதற்காக பைத்துல்மால்ஏற்படுத்தப்பட்டு பல்லாண்டுகளாக செயல்படுத்தி வருகின்றது.  நமதுபைத்துல்மாலின் சிறப்பான செயல்பாடுகளை  அறிந்து பல ஊர்களில் பைத்துல்மால்ஏற்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ

அல்லாஹ்வட்டியை அழித்து கொண்டேதர்மங்களை பெருகச் செய்து கொண்டிருக்கின்றான்; பாவிகளான நிராகரிப்பாளர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. 2:276

மேற்கண்டவசனம் மூலம் நமது  தர்மங்கள் வட்டியை ஒழிப்பதற்காக உபயோகப்படுத்தப்படவேண்டும் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள முடிகின்றது.   மேலும் இந்தஇடத்தில் சதகா என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பதால்அதிகமானோர் அல்லாஹ் ஸகாத்தைப்பற்றி கூறவில்லைஎன வாதிடுகின்றனர்.  இந்த வசனத்தில் இடம் பெறும் ஸதகா என்பது ஸகாத்தையும்குறிக்கும் என்பதை நாம் நினைவில் கொண்டு நமது ஸகாத் வட்டியை அழிப்பதற்காகஉபயோகப்படுத்த வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஸதகா என்ற வார்த்தையும் ஸகாத்தை குறிக்கும் என்பதற்கு ஆதாரமாக கீழ்கண்ட வசனத்தை படித்துப்பார்க்கவும்.

إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ فَرِيضَةً مِنَ اللَّهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ

தர்மங்கள்தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தர்மத்தை வசூல் செய்யும்ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால்  உள்ளங்கள்ஈர்க்கப்பட்டவர்களுக்கும், அடிமை விடுதலைகாகவும், கடனாளிக்காவும், அல்லாஹ்வின் பாதையிலும், வழிப்போக்கர்களுக்குமே உரியவை. அல்லாஹ்விடத்திலிருந்துள்ள கடமையாகும் - மேலும் அல்லாஹ் ஞானத்(துடன்) அறிபவன்.9:60
எனவேமேற்குறிப்பிட்ட  2:276 வசனம் மூலம் நாம் ஸகாத்தை கொண்டு  வட்டியில்லாஉலகத்தை உருவாக்கினால், அல்லாஹ்  மக்கள் ஸகாத்தாக கொடுத்த தர்மத்தைவளரச்செய்வதாக வாக்களிக்கின்றான்.  அதே நேரத்தில் வட்டியைஅழித்துவிடுவதாகவும் வாக்களிக்கின்றான்.

எனவே இணைவைப்பில்லாமல் அல்லாஹ்வை வணங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டஇறையில்லங்களில்  செயல்படும் அனைத்து முஸ்லிம் ஜமாஅத்களும் கண்டிப்பாகதொழுகையுடன் ஸகாத்தை நிலைநாட்டி வட்டியில்லா ஒரு சமுதாயத்தை அவரவர்பகுதியில் ஏற்படுத்த வேண்டியது கடமை என்பதை மேற்கண்ட வசனங்களில் இருந்துசிந்திப்பவர்களுக்கு புரியவரும்.
மேலும், அல்லாஹ் நமக்கு இறக்கி அருள் செய்த குர்ஆனையும், ஆதாரப்பூர்வமான நபிவழியையும் தெளிவாக சிந்தித்து விளங்குவதற்காக  

தெருமுனைப்பிரச்சாரங்கள்,

அஸ்மா பெண்கள் அரபிக்கல்லூரி,

குழந்தைகளுக்கான  அரபி மொழி பாட சாலை,

வீடுகளில் பெண்களுக்கான மார்க்க விளக்க வகுப்புகள்,

பெண்களுக்கான வினா விடை பிரசுரங்கள்,

குடும்பத்தில் ஏற்படும் தகராறுகளை தீர்த்து வைக்க குர்ஆன் ஹதீஸ் உபதேசங்கள்,

மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காக பள்ளிக் கூடங்களுக்கு சென்று நடத்தும் ஒலி ஒளி திரை வழி கல்வி வகுப்புகள்,

அனைத்து வயதினருக்கும், குர்ஆனை படித்து விளங்கி கொள்ள ததப்புருல் குர்ஆன் வகுப்புகள்,

புதிதாக இஸ்லாத்தை ஏற்று வருபவர்களுக்கு சிறந்த ஆலோசனை வகுப்புகள்,

இஸ்லாத்தை அனைவரும் தெளிவாக புரிந்து கொள்வதற்காக மாதாந்திர  துண்டு பிரசுர விநியோகம்,

நமது ஜமாஅத் வளாகத்தில் வந்து படித்து செல்வதற்காக பல மொழி நூல் நிலையம்,

போன்றவைகள் நமது ஏர்வாடி - முஸ்லிம் ஜமாஅத்தின் நிர்வாகத்தின் கீழ் நடைபெற்று வருகின்றது.

மேலும்  ரமளான் மாதத்தில் ஏர்வாடி - முஸ்லிம் ஜமாஅத்திற்கு உட்பட்டபகுதிகளில் வாழும் அனைத்து மக்களுக்கும் இப்தார் விருந்தாக நோன்பு கஞ்சிஏற்பாடு செய்து விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.  ஏர்வாடி -முஸ்லிம் ஜமாஅத் மஸ்ஜிதில் நடைபெறும் இப்தார் விருந்தில் ஆண்களும்பெண்களும் இப்தார் விருந்தில் கலந்து கொள்கின்றார்கள்.  இப்தார் விருந்துகீழ்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில் நன்மையை கருதி செய்துவருகின்றோம்.  எனவேவிருந்து செலவுகளில் பங்கெடுக்க விரும்பும் ஜமாஅத்தார்கள் தங்களுடையநன்கொடையை ஏர்வாடி - முஸ்லிம் ஜமாஅத்திற்கு வழங்கி நன்மையின் பங்குபெற்றுக்கொள்ளலாம்

நோன்பாளிகளுக்குஇஃப்தார் உணவளித்தால் நோன்பாளிகளுக்கு கிடைக்கும் நன்மையைப் போலஉணவளிப்பவருக்கும் கிடைக்கும்என நபி(ஸல்) கூறியுள்ளார்கள் (அஹ்மத்)

மிகச் சிறந்த இரண்டு செயல்கள்.''இஸ்லாத்தில் சிறந்த செயல் எது?'' என ஒரு மனிதர் இறைத்தூதர்(ஸல்)அவர்களிடம் வினவியதற்கு, ''நீர் உணவளிப்பதும், நீஅறிந்தோருக்கும், அறியாதோருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்'' என்றுபதிலளித்தார்கள்.அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ரு நூல்: புகாரீ, முஸ்லிம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் ஒரு நோன்பாளியை  நோன்புதிறக்கச் செய்கிறாரோ அவருக்கு நோன்பாளியின் நன்மையைப் போன்று கிடைக்கிறது.ஆனாலும் நோன்பாளியின் நன்மையில் எதுவும் குறைந்து விடாது. அறிவிப்பவர் :ஸைத் பின் ஹா­த் (ர­லி) நூல் : திர்மிதி (735)

இஃப்தார் செலவுகளுக்காக தினமும்  சுமார் ஏழாயிரம் ரூபாய் வரைசெலவாகின்றது.   நாம் தற்போது ஒரு நாள் கஞ்சி செலவு வகைக்காகரூபாய்5000/= நிர்ணயித்துள்ளோம்.   எனவே  இந்த நன்மையிலும் பங்கெடுக்கவிரும்பும் ஜமாஅத்தார்கள் தங்களுடைய அன்பளிப்புகளை ஜமாஅத் நிர்வாகபொறுப்பாளர்களிடம் கொடுக்கும்படி  அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

பெருநாள் தர்மம். (ஸகாத்துல் ஃபித்ர்)  

ரமழானில் இருந்து விடுபடுமுகமாக ஸகாத்துல் ஃபித்ரைஅனைத்து மனிதர்கள்மீதும் நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். ஒரு ஸாஉபேரீத்தம்பழம்அல்லது ஒரு ஸாஉகோதுமைசுதந்திரமானவன், அடிமை, ஆண், பெண் அனைத்துமுஸ்லிம்களுக்காகவும் வழங்க வேண்டும்என விதித்தார்கள்
அறிவிப்பவர் : அலி இப்னு உமர்(ஸல்),
நூற்கள் :புகாரி, முஸ்லிம், முஅத்தா.

மேலும் ரமளான் மாதத்தில்ஏற்படும் தவறுகளுக்காக ஒவ்வொரு முஸ்லிமும் செலுத்த வேண்டிய ஸகாத்துல்ஃபித்ர் என்னும் பெருநாள் தர்மத்திற்கான தொகையைஏர்வாடி- முஸ்லிம் ஜமாஅத்தின் பைத்துல்மால்வசூல் செய்து பல வருடங்களாக முறையாக விநியோகம் செய்துவருகின்றது.

ஏர்வாடி முஸ்லீம் ஜமாஅத் ஏர்வாடியில் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்துஸகாத்துல் ஃபித்ரைவசதியுள்ளவர்களிடம் வசூல் செய்து ஏழைகளின் வீடு தேடிசென்று கொடுத்துவருகிறது.மக்களை தெருதெருவாக அலைய விட்டுக்கொண்டிருந்தசூழ்நிலையை மாற்றி, முன்மாதிரியாக இஸ்லாம் சொன்ன அடிப்படையில்ஏர்வாடி ஊரில் உள்ளஏழைகளுக்கு ஃபித்ராவை வழங்கிவரும் அதே வேளையில், ஏர்வாடியை சுற்றியுள்ளகிராமங்களில் வசித்து வரும் முஸ்லீம்களுக்கும் பெருநாள் தினத்தில்சந்தோஷமாக பசி இல்லாமல் வாழ ஃபித்ரா வழங்கி வருகிறோம்.

ஏர்வாடி, பணகுடி, வள்ளியூர், திருக்குறுங்குடி, களக்காடு, மாவடிபோன்ற ஊர்களுக்கு ஃபித்ரா விநியோகம் தற்போது நடைபெற்று வருகிறது.பிரிவினைகள் இல்லாமல் ஒரே ஜமாஅத்தாக வாழ்ந்து வந்த காலத்தில் ஏர்வாடி ஃபித்ரா மதுரை வரை விநியோகிக்கப்பட்டு வந்தது.தற்போது ஜமாஅத் அல்லாத, மஸ்ஜிதுகள் இல்லாத இயக்கங்கள், விளையாட்டு சங்கங்கள், சமூக சேவை இயக்கங்கள்தங்கள் பெயர்களை மக்கள் அறிந்து கொள்வதற்காக ஃபித்ராவைதனித்தனியாக வசூல் செய்து நாம் ஃபித்ரா வழங்கிய அதேகுடும்பத்திற்கு மீண்டும் மீண்டும் வழங்குவதால், ஏற்கனவே மதுரை வரை வழங்கிவந்த ஃபித்ராஏர்வாடி மற்றும் சில கிராமங்களுக்கே வழங்க முடிகிறது என்பதையும்வருத்தத்துடன் இங்கே பதிவு செய்து கொள்கிறோம்.

எனவே இணைவைப்பில்லாமல் செயல்படும் முஸ்லிம் ஜமாஅத்கள் அனைவரும்ஒருங்கிணைந்தால் ஸகாத்துல் ஃபித்ராவைதமிழ்நாட்டில் உள்ள ஏழைகளுக்கும்வழங்கி, மீதமுள்ளதை  கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் உள்ள ஏழை மக்களுக்கும்பெருநாள் தினத்தில் சந்தோஷமாக வாழவழிசெய்ய முடியும்.எனவேஉங்கள் ஃபித்ராவை உங்களின் தொழுகையைஆக்கிக்கொண்ட ஜமாஅத்தின் பைத்துல் மாலில் மட்டுமே செலுத்துங்கள்.மஸ்ஜித்களை ஏற்படுததாமல், ஸகாத்தையும், ஸகாத்துல் ஃபித்ராவையும் வசூல்செய்யும் இயக்கங்களுக்கு வழங்கி உங்கள் நன்மைகளை பாழாக்காதீர்கள்.

மேலும்ரமளான் மாத ஸகாத்துல் பித்ர் என்னும் பெருநாள் தருமத்தை சேகரித்து  நபி(ஸல்) அவர்கள் அதை விநியோகித்தார்கள் என்பதால்தான் நாம் மக்களிடம்ஸகாத்துல் ஃபித்ராவையும் சேகரித்து விநியோகம் செய்கின்றோம்.  அதற்கானஹதீஸ் ஆதாரம் கிழேகொடுக்கப்பட்டுள்ளது.

ரமளான் ஸகாத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை நியமித்திருந்தார்கள்.............., அபூஹுரைரா (ரலி)புகாரி 3275, 5010

மக்கள் முன்கூட்டியே பெருநாள் தர்மமான ஸகாத்துல் ஃபித்ரை வழங்கிவிட வேண்டும் என்பதற்கான ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது.

மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தைவழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்கட்டளையிட்டிருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி1503, 1509

நபித் தோழர்கள் நோன்புப் பெருநாளைக்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்களுக்குமுன் ஃபித்ராவைக் கொடுத்து வந்தனர் என்று புகாரி 1551-வது ஹதீஸ் பதியப்பட்டுள்ளது.

வருடாவருடம் ஸகாத்துல் பித்ருக்கான தொகை நிர்ணயம் செய்யப்படும்.இவ்வருடம் குடும்பத்திலுள்ளஒரு நபருக்குரூபாய் 75.00 என நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது. எனவே குடும்பத்தில்இன்று பிறந்த குழந்தைக்கும்சேர்த்து கணக்கிட்டு எத்தனை நபர்கள் உள்ளார்களோ அத்தனை பேர்களுக்கும்தலைக்கு75.00 (எழுபத்தைந்து) ரூபாய் என கணக்கிட்டு ஸகாத்துல் பித்ர் தொகையை தரும்படிகேட்டுக்கொள்கிறோம்.

நோன்பு பெருநாள் விருந்து

ஏர்வாடி முஸ்லீம் ஜமாஅத் குடும்பங்கள் ஒன்று கூடி பெருநாள் தொழுகை தொழுதுசந்தோஷமாக இருக்க வேண்டிய நாளில் ஜமாஅத்தார்கள் அனைவருக்கும் நமது ஏர்வாடிமுஸ்லீம் ஜமாஅத் சார்பாக பெருநாள் விருந்து ஏற்பாடு செய்து வருகிறோம்.ஜமாஅத்தை சேர்ந்த ஒரு சில சகோதரர்களின் பொருளாதாரத்தை கொண்டு இந்த பெருநாள்விருந்து நடைபெற்று வருகிறது. இது தேவைதானா என பல பேர் எதிர்குரல்எழுப்பினார்கள். எழுப்புகிறார்கள்.

இணைவைக்கும் மக்கள் அவர்களுடைய கந்தூரி விழாக்களில் ஊர் முழுவதும்விருந்து கொடுத்து சந்தோஷத்தை கொண்டாடுகிறார்கள். அதற்கு ஏராளமானபொருளாதாரத்தையும் செலவு செய்கிறார்கள்.

அல்லாஹ்சிறப்பாக்கிய பெருநாள் தினத்தில், நோன்பை ஹராமாக்கிய புனிதமான நாளில் நம்மில் சிலர் மட்டும் நல்ல உணவைசாப்பிடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல்,  ஜமாஅத்தை சேர்ந்த அனைத்து சகோதரசகோதரிகளும் விருந்துண்டு, பெருநாள் தினத்தை சந்தோஷமாக கொண்டாடுவது எந்தவகையில்தவறாகும் என இதை தவறு என விமர்சிப்பவர்கள் பதில் கூற கடமைப்பட்டுள்ளார்கள்.

மேலும்கந்தூரி விழாக்களில் வசூல் செய்வது போல் வீட்டிற்கு வீடு வரி எனசொல்லி வசூலித்து இந்த விருந்து வழங்கப்படவில்லைஎன்பதை நினைவில்கொள்ளவும்.ஒரு சில வசதியுள்ளவர்கள் பெருநாள் தினத்தின் சிறப்பை அறிந்துதங்கள் பொருளாதாரத்தை செலவு செய்ய முன்வருகிறார்கள். அதன் அடிப்படையில்தான்பெருநாள் விருந்து நடைபெறுகிறது. எனவே இந்த விஷயத்தில் எந்தவிதமானதவறானஎண்ணங்களை யாரும் ஏற்படுத்தாதீர்கள். மேலும்  நம்முடன் பெருநாள் கொண்டாடதயங்குபவர்கள், பெருநாளன்று நோன்பு வைப்பவர்களை திருப்திப்படு்த்தவேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற விதண்டாவாதங்களில்ஈடுபடுகின்றார்கள். எனவே அவர்களை யாரும் பொருட்டாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.

மிகச் சிறந்த இரண்டு செயல்கள்.
''இஸ்லாத்தில் சிறந்த செயல் எது?'' என ஒரு மனிதர் இறைத்தூதர்(ஸல்)அவர்களிடம் வினவியதற்கு, ''நீர்உணவளிப்பதும்,நீஅறிந்தோருக்கும், அறியாதோருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்'' என்றுபதிலளித்தார்கள்.அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ரு நூல்: புகாரீ, முஸ்லிம்

எனவே  ஏர்வாடி - முஸ்லிம் ஜமாஅத்தில் இணைந்து தாங்களும்இஸ்லாத்தின் உன்னத பணிகளில் பங்கெடுக்கும்படி அன்புடன் ஏர்வாடி - முஸ்லிம்ஜமாஅத் சார்பாக உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
ஹிஜ்ரி1433  வது வருட ரமளான் மாதம் வெள்ளிக்கிழமை ஆரம்பித்தது.  ரமளான் மாதம் 29 நாட்களுடன் எதிர் வரும் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகின்றது.   சனிக்கிழமைஹிஜ்ரி 1433 வது ஆண்டின் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளாகும்.

நோன்புதடுக்கப்பட்ட பெருநாள் தினமான சனிக்கிழமை  நாம் நோன்பிருந்து ஹராமானகாரியத்தை செய்துவிடாமல்  அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாக்க  வேண்டும்.

இப்படிக்கு
நிர்வாகம்
ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத்

14 ரமளான் 1433  வியாழக்கிழமை (முழு நிலவு நாள் - Full Moon Day)
ஸகாத்துல் ஃபித்ராவிற்கான தொகை ஒரு நபருக்கு  = ரூபாய் 75.00 மட்டும்