Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

பிறை 12ம் நாளில் பெளர்ணமியா!!!

சூரியனும் சந்திரனும் திட்டமிட்ட கணக்கின்படியே இயங்குகின்றன. (அல்குர்ஆன் 55:5).

அவன்தான் சூரியனை பிரகாசமாகவும் சந்திரனை ஒளியுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும் கணக்கையும் நீங்கள் அறிந்துக் கொள்ளும் பொருட்டு சந்திரனுக்கு பல படித்தரங்களை ஏற்படுத்தினான். அல்லாஹ் இவற்றையெல்லாம் சத்தியத்தைக் கொண்டே இல்லாமல் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 10:5).

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்பு சகோதரச் சகோதரிகளே!

நம்மை படைத்து பரிபாலிக்கக்கூடிய அல்லாஹ் மேற்கண்ட அல்குர்ஆன் 55:5வசனத்தின் மூலம் சூரியனும், சந்திரனும் கணக்கின்படி இயங்குகின்றன என்றும் மேலும் அல்குர்ஆன் 10:5வசனத்தின் மூலம் சந்திரனின் மூலம் பல ஆண்டுகளை கணக்கிட முடியும் என்றும் கூறுகின்றான். ஆனால் நாமோ ஒரு மாதத்தைக் கணக்கிடுவதற்கே தடுமாறுகிறோம். ஓவ்வொரு வருடமும் நாம் நோன்பை ஆரம்பிக்கும் போதும், நோன்பை முடித்து பெருநாளை கொண்டாடும் போதும் பிறையை பார்த்து விட்டு ஐயோ! இது இரண்டாவது பிறை தான், மூன்றாவது பிறை தான் என்று சொல்லி புலம்புகின்றோம். ஏன் இந்த அவலநிலை? ஏன் இந்த தடுமாற்றம்? யாரை திருப்திப்படுத்த இந்த ஆறுதல் வார்த்தைகள்.

அல்லாஹ்வும் அவருடைய தூதரும் பிறைகளை பார்த்து கணக்கிட முடியும் என்று கூறிய அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை 09.12.1435 (3/10/14) அரஃபா என்றும், மறுநாள் சனிக்கிழமை 10.12.1435 (4/10/14) ஹஜ் பெருநாள் என்றும் உலகில் சுமார்60க்கு மேற்பட்ட நாடுகளிலுள்ள கோடிக்கணக்கான மக்களும் இந்தியாவில் நாமும் பெருநாள் கொண்டாடினோம்.

ஆனால் ஞாயிற்றுக்கிழமை 05.10.2014பிறை 9தான் என்று அரஃபாவும் மறுநாள் திங்கள்கிழமை 06.10.2014அன்று தான் பிறை 10என்று பெருநாளை நமது ஊரிலும் இந்தியாவில் சில அமைப்பினரும், சில மக்களும் பெருநாள் கொண்டாடினர்.

திங்கள்கிழமை தான் பிறை 10, அன்று தான் ஹஜ் பெருநாள் என்றால் செவ்வாய் 11, புதன் 12ஆகும். இன்று 08.10.2014புதன்கிழமை இன்ஷாஅல்லாஹ் சந்திரக் கிரகணம் ஏற்படுகின்றது. எங்காவது? என்றாவது? பிறை 12ல் சந்திரக் கிரகணம் ஏற்படுமா? சற்றே சிந்தியுங்கள்!

என்று பெளர்ணமியோ அன்று தான் அல்லாஹ்வின் அத்தாட்சியாகிய சந்திரக் கிரகணம் ஏற்படும். பூமி, சந்திரன், சூரியன் என்று ஒரே நேர்கோட்டில் வந்து சந்திரனை சூரியனின் ஒளி படாமல் பூமி மறைக்கிறதோ அன்று தான் சந்திரக் கிரகணம் ஏற்படும்;அது தான் இன்று 08.10.14புதன்கிழமை இன்ஷா அல்லாஹ் நடக்க போகின்றது.

மீண்டும் உங்களுக்கு ஒன்றை நினைவு படுத்துகின்றோம். நிச்சயமாக பிறை 12ல் பெளர்ணமி ஏற்படாது. அதே போன்று வரக்கூடிய 23.10.2014அன்று வியாழக்கிழமை சந்திர மாதத்தின் கடைசி நாளாகும். அன்று இன்ஷா அல்லாஹ் சூரிய கிரகணம் ஏற்படுகின்றது. உங்களது கணக்குப்படி அன்று வியாழக்கிழமை பிறை 27ஆகும். பிறை 27அன்று எங்காவது சூரியக் கிரகணம் ஏற்படுமா?

எனவே அன்பானவர்களே! நம்மில் பெரும்பான்மை மக்களும் ஞாயிற்றுக்கிழமை 05.10.2014அன்று தவறான நாளில் அரஃபா நோன்பு நோற்று மறுநாள் திங்கள்கிழமை 06.10.2014அன்று தவறான நாளில் ஹஜ் பெருநாளைக் கொண்டாடினார்கள்.

இனி வரக்கூடிய காலங்களிலாவது சிவகாசி காலண்டரை வைத்தோ, தலைவர்கள் சொல்வதை வைத்தோ, டவுண் ஹாஜி சொல்வதை வைத்தோ நம்முடைய நோன்புகளையும், பெருநாட்களையும் ஆரம்பிக்காமல் அல்லாஹ் தனது குர்ஆன் 10:5வசனத்தில் கூறிய அடிப்படையில் பிறைகளைப் பார்த்து சரியான நாட்களில் நாட்களை ஆரம்பிப்போம்! பெருநாட்களை கொண்டாடுவோம்!